நுகத்தடி நாட்கள்
சுகன் கவிதைகள்
இறந்தவனும் சுமந்தவனும்
'எட நாயே வந்திருக்கிறது இந்தியன் ஆமியடா வந்தா சுட்டுப் போடுவாங்களடா உந்த ஊமல் கொட்டையை எறிஞ்சு போட்டு வீட்டை வாடா” தந்தை சொல்லுக் கேட்காத சென்றியில் நின்ற சின்னப்பொடியன் திரும்பி வீட்டுக்கு வரவில்லை
' ஆமி வந்தா நாங்க உங்கண்டை.............. யையே கழட்டி எறியிறது? எல்லாத்தையும் தூக்கிக் கொண்டு போங்கோடா விழுவாரே” என்று சொன்ன மணியண்ணையும் வரவில்லை ' இனிக் கதைச்சாச் சுடுவோம்” என்ற சண்டியரும் வரவில்லை. 'அம்மா நான் திரும்பி வந்தா லெப்டினன்ட் கேணல் இல்லையெண்டா வீர மரணம்” சொல்லிப்போன தம்பியும் வரவில்லை
இவர்கள் தங்கள் மனங்களில் வாழ்வதாகச் சொன்ன அடுத்து சுமந்தவனை சுமந்த இன்று வந்து சேர்ந்த அண்ணனைக் கேட்டேன்.
'நீங்கள் எப்படித் தப்பி வந்தனீர்கள்?” அறைமுழுவதும் பார்த்துவிட்டுச் சொன்னார்
'அஞ்சு வரிசமா இஞ்சை இருக்கிறாய் ஒரு வயிரவர் படம் இல்லாமை”Labels: சுகன், சுகன் கவிதைகள், நுகத்தடி நாட்கள் >>>மேலும் வாசிக்க>>>
|