நிச்சாமம்

 
rss-top-right.jpg

English Pages
  • World Socialist Web Site
  • GROUNDVIEWS
  • VIKALPA
  • LANKA HERMES
  • FEDERALIDEA
  • TRANSCURRENTS
  • SAHASAMVADA
  • VOICES OF RECONCILIATION
  • HUMAN RIGHTS WATCH
  • நினைவுகளில்
    ஈழத்தின் கன்பொல்லை கிராமத்தில், சாதி ஒழிப்புப் போரில் முன்னின்று போராடி வெடிகுண்டுகளைத் தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த தலித் போராளிகள்: கி.வேலும் மயிலும், மா.சீவரட்ணம், க.செல்வராசா
    உங்கள் பக்கங்களில் இணைக்க கீழ் உள்ள நிரலியைப் பிரதிசெய்து ஒட்டுக!

    Nichchamam



    ஏற்கனவே
    சொல்லப்பட்டவை
    வடிவமைப்பு

    BLOGGER

    சுட்டிகள்
    வருகைக்கு நன்றி
    தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் அவர்களின் 20 ஆண்டு நினைவு
    Tuesday, October 13, 2009
    காலில் வீக்கத்துடன் அந்தக் காலை லேசாக தடவிக்கொடுத்தவாறே திண்ணையில் உள்ள சாய்மனைக்கட்டிலிலிருந்து இடதுசாரிச் சிந்தனை அடிப்படைகளை கோரோசனைக் குழிசையை சிரட்டையில் உரைத்துப் பக்குவத்துடன் குழந்தைகளுக்குக் கொடுக்கும் நம் கிராமத்து வைத்தியர்போல அவர் அருகே இருந்து பாடம் கேட்ட 1983 கால நாட்களை இன்று நினைவுகூர்கிறேன்.

    தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் அவர்கள் மனைவி பிள்ளைகளுடன் 1969 இல்


    இடையிடையே எழும்பி முற்றத்தில் நடக்கும் பாவனையிலும்கூட மூலதனத்தினதும் தனிச்சொத்துடமையினதும் அரசினதும் உழைப்பாளர் வர்க்கத்தினதும் இனவேறுபாடுகளைக் கடந்து ஐக்கியப்படவேண்டிய தவிர்க்கவியலாத நியதிபற்றி ஆசான் மணியத்தாரிடம் அப்போது பாடம் கேட்டதை இப்பொழுது நினைவுகூர்கிறேன்

    கீறாத,கிறுக்கிக் கசக்கிவைக்காத காகிதமாக அப்போது நாங்கள் இருந்தோம். அவர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது) பொதுச்செயலாளராக இருந்தார். அவ்வப்போதான உரையாடல்களின் வழியே இன்றுவரை என்னிடம் தொடரும் வர்க்க சாதிய போராட்ட அடிப்படைகள் அவரிடம் இருந்து முதிசமாக எனக்குக் கிடைத்தவைகளே.

    தமிழில் வெளிவந்த சீன - சோவியத் இலக்கியங்களை எனக்கு கனிவோடு அளித்த ஒளியும் அறிவும் விவேகமும் நிறைந்த அந்த முகம் நினைவில் இப்போது அபூர்வமாகவும் அதிசயமாகவும் மாறிவிட்டது. நாம் மறுத்தபோதும் துப்பாக்கிகளைத் தருவதற்கு எல்லோரும் இருந்தனர். இப்போதும் இருக்கின்றனர்.

    தீண்டாமைக்கெதிரான போராட்டங்களில் அவரின் அன்றைய நெறிப்படுத்துதல்களே இன்றுவரை வன்முறையற்ற வடிவங்களில் எம்மை நடத்திவருகிறது.

    தீண்டாமை எதிர்ப்புப்போராட்டத்தின் போது தோழர் மணியம் அவர்கள் முன்னணியில் நின்று போராடியதிலும், அப்போது பொலிஸாரின் வன்முறையிலும் தடியடியிலும் தாக்கப்பட்டதிலும் தொல்புரத்தில் தலித்துகளிற்கான குடிநீர் போராட்டத்தில் ஈடுபட்ட முன்மாதிரியிலும் அவரின் நினைவு இன்றுவரை தொடர்கிறது.

    'வெய்யிலில் இருந்தால்தான் நிழலின் அருமை தெரியும்' என்பது அவர் போன்ற பெரும் ஆளுமைகள் மறைவின்பின் இன்று வெறுமையாகவே தெரிகிறது. புலிகளால் அவர் அச்சுறுத்தப்பட்டார். எப்போதும் செயற்படாதவாறு அவர் முடக்கப்பட்டார்.

    ஒரு கார்த்திகை விளக்கீட்டு நாளின்போது அவர் மகனும் எனது தோழனுமான 'மீரான் மாஸ்ரர்' அவர்களோடு கடைசியாக அவர்கள் வீட்டிற்குப்போய் அம்மாவின் கையால் கொழுக்கட்டையும் மோதகமும் சாப்பிட்டபின்னர் அவர் வீட்டிற்கு இன்றுவரை போகவில்லை.
    இப்போது போகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.ஆனால் மிஞ்சியிருப்பது...மணியத்தார் இருந்தால் எவ்வளவு நல்லாக இருக்கும்.

    சுகன்

    Labels:

    இதனை மின்னஞ்சல் செய்ய!~~~~~~~e-mail this post

    வார்ப்பும் இடுகையும்:நிச்சாமம் @ 10/13/2009 12:57:00 AM  
    1கருத்துக்கள்:
    • At Wednesday, October 14, 2009 4:17:00 AM GMT+02:00, Anonymous வள்ளியம்மை சுப்பிரமணியம் said…

      அன்புமிக்க மகன்,
      வணக்கம்.
      இருபத்து ஐந்து வருடங்களின் பின் மின்மடல் மூலம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.

      உங்கள் இணையத்தின்
      பெயரை”நிச்சாமம்” என்று வைத்திருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்!
      வட்டுக்கோட்டையில் பிறந்த ஒருவர் சங்கானையில் உள்ள ஒரு கிராமத்தை மதிக்கிறார் என்றால் அது மிகவும் வரவேற்கப் படக்கூடிய ஒரு திருப்பமாகும்.
      1966ம் ஆண்டு நிகழ்ந்த அக்டோபர் எழுச்சிக்குப் பின்னர் வடபகுதிச் சில கிராமங்களில் சாதி அடக்குமுறைக்கு எதிராக போராட்டங்கள் தலைதூக்கின. அவற்றுள் சங்கானை-நிச்சாமம் கிராமம் முன்னோடியாகத் திகழ்ந்தது. தேனீர்க்கடைப் பிரவேசத்தைத் தொடர்ந்து வன்முறைகள் வெடித்தன.வயல் வெளிகளில் பயிர்களுடன் வளர்ந்தவர்கள்- பயிருக்குள் பூச்சி விழுந்தால் பூச்சிக்கொல்லி தெளித்துப் பழகிய விவசாயிகள். தங்களின் குடியிருப்புக் குடிசைகளைத் தீயிட்டவர்களை -அந்த மேட்டுக்குடி மக்களை காவல்துறையினரும் கண்டும் காணாமல் விட்டுவிட்டனர். அந்தக் காலகட்டத்தில்
      கவிஞர்.சுபத்திரன் அவர்கள் பாடிய பாடலின் சிலவரிகள் இதோ:-
      “சங்கனைக் கென்வணக்கம் சரித்திரத்தில் உன்நாமம்
      மங்காது ஒருநாளும் மண்ணிற் பலகாலம்...” என்றும்
      “எச்சாமம் வந்து எதிரி நுழைந்தாலும்
      நிச்சாமக் கண்கள் நெருப்பெறிந்து நீறாக்கும்.
      குச்சுக் குடிசைக்குள் கொலுவிருக்கும் கோபத்தை மெச்சுகிறேன்....மெச்சுகிறேன்....”என்று உணர்வு பூர்வமான அப்பாடலை ஒவ்வொரு குழந்தையின் வாயிலும்
      இசையாக வெளிவந்தது. அப்படியான வீரத்தின் விளைநிலமாகிய நிச்சாமத்தின் பெயரைச் சூட்டியுள்ள உங்களின்
      மன உணர்வு வெளிப்படுகிறது. அது போல 1974ல் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான நிச்சாமம் தோழருக்கு புதுவை-இரத்தினதுரை அவர்களின் பாடலுடன் சந்திப்போம்.....
      “நாளை விடிபொழுதின் நம்பிக்கையான கதிர்
      ஏழை உலகமதின் எழுச்சிக்கு உதய ஒலி...
      வாய்க்கால் வரம்பருகே வளர்ந்துவரும் செங்கீரை
      பூக்காத காவிடையே பூத்தவொரு செம்பருத்தி..”
      இப்படியான மறக்கமுடியாத நினைவுகளுடன் மீண்டும் சந்திப்போம்!தங்கள் செய்திக்கு மிக்க நன்றி! அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்.

       

    Post a Comment

    <<மீண்டும் முகப்பு
     

    மேலும் அறிய

    Name: NICHAMAM
    Home:
    About Me:
    See my complete profile
    இனி

    புதுவிசை

    கேளிர்
    இலங்கையிலிருந்து

    கூட்டுமுகப்புக்கள்
    • :: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines
    • ”மாற்று!
    • Thiratti.com Tamil Blog Aggregator
    காலக் கூடை
    FEED/வாசகராகுங்கள்!!

    எங்கள் செய்தியோடையின் வாசகராகுங்கள்

    Add to Google Reader or Homepage

    Add to My AOL Add to Excite MIX

    NICHAMAM

    [Valid Atom 1.0]

    "Ours is a battle not for wealth or for power. It is a battle for freedom. It is a battle for the reclamation of human personality" (Dr. B.R. Ambedkar)